என்னை பற்றி

நான் எஸ்.பிரேமலதா. வணிகவியல் முதுகலை பட்டதாரி. ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். என்னை பற்றி சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை. சராசரி வாழ்க்கை வாழும் ஆயிரக்கணக்கான பெண்களில் நானும் ஒருத்தி. காலையில் எழுந்து அவசரமாக வேலை முடித்து அலுவலகம் சென்றுவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்பி வீட்டு வேலைகளை முடித்து தூங்கி எழுந்து மீண்டும்… என்று ஒரு இந்திர தனமான வாழ்க்கை வாழும் சராசரி பெண். பெரிய அளவில் லட்சியங்களோ, எதிர்ப்பார்ப்புகளோ இல்லை என்றாலும் எடுத்துக்கொண்ட வேலை எதுவானாலும் அதை திறம்பட செய்து முடிக்க வேண்டும் என நினைப்பவள். என் அலுவலக வேலைகளில் அதை கடைபிடித்தும் வருகிறேன்.

எனக்கு கவிதைகள் பிடிக்கும்.
- மற்றவர்களின் கவிதைகளை படிக்க அதிகம் பிடிக்கும்,
- கொஞ்சம் கொஞ்சம் எழுதுவதற்கும் பிடிக்கும்.அதுதான் இங்கு கவிதைகள் என்ற தலைப்பில் வருவது. படித்து பார்த்து நான் மேலும் தொடர தகுதி உடையவளா எனக் நீங்கள்தான் கூறவேண்டும்.

எனக்கு புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். என் உலகமே புத்தகங்களை சுற்றிதான்.
- தலைவர்களின் சுயசரிதம், வரலாற்று புதினங்கள், சமூக நாவல்கள், தமிழ் இலக்கியங்கள் என்று எதுவாக இருந்தாலும் அதை படித்து முடிக்காமல் எனக்கு தூக்கம் வராது. கம்பன், கல்கி, சாண்டில்யன், ரமணிசந்திரன், , பாரதியார், பட்டுக்கோட்டை, வைரமுத்து இப்படி பிடித்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இசையில் மிகவும் விருப்பம் உண்டு. அதுவும் பழைய பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். யாருக்கு தான் பிடிக்காமல் போகும். எம்.எஸ்.வி ,இளையராஜா, ரகுமான்  இசை மிகவும் பிடித்தமானது. நெடுந்தூர இரயில்,பேருந்து பயணங்களில் இவர்களின் இசையை கேட்பதில் கிடைக்கும் சுகமே தனிதான்.

29 பதில்கள்

11 09 2009
Karthikeyan

Try Thi.Janakiraman (Chembaruthi) and Na.parthasarathy book (Kurinchi malar).
This writers name not in your list.Thats why i notice it.If you already read the books,ignore this.

12 09 2009
kapilashiwaa

மிகவும் நன்றி கார்த்திகேயன் சார். தி.ஜானகி ராமன் படித்திருக்கிறேன். ந. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலரை இனிதான் படிக்க போகிறேன். .

12 09 2009
Karthikeyan

Thank you.

16 09 2009
அடலேறு

வணக்கம் பிரேமலதா,

முதலில் வலைப்பக்கம் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.

தாங்கள் என்னுடைய வலைபக்கத்தில் பின்னுட்டம் இட்டும் கூட என்னால் உங்களுடைய வலைப்பூவை பார்க்க முடியவில்லை காரணம் நீங்கள் தங்களுடைய தள உருளையை பதிவு செய்ய மறந்தது தான். இதன் காரணமாக நிறைய வலைதள தொடுப்புகளை தவற விட்டிருப்பீர்கள் என்று என்னுகிறேன்.

//என்னை பற்றி சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை.//
ஏன் இல்லை , எவ்வளவு அழகாக நேர்த்தியாக ஒரு வலைப்பக்கம் வைத்திருக்கிறீர்கள் இதுவே போதுமே .
//முதுகலை பட்டதாரி// இதை சாதனையாக பார்க்க வில்லையா.

//படித்து பார்த்து நான் மேலும் தொடர தகுதி உடையவளா எனக் நீங்கள்தான் கூறவேண்டும்//
நூறு சதவீதம் தகுதி உடையவர் தோழி நீங்கள்

//எனக்கு புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். என் உலகமே புத்தகங்களை சுற்றிதான்.//
எனக்கும் கூட தான்

//நெடுந்தூர இரயில்,பேருந்து பயணங்களில் இவர்களின் இசையை கேட்பதில் //

நெடுந்தூர ரயில் பயணமா , நன்று அப்படியானால் நீங்க என்னுடைய ரெயில் பயணங்களில் படித்து தான் ஆக வேண்டும் .

காத்திருக்கிறேன்..கவிதை தொடங்கி ஒரு நேர்த்தியாக பதிவுகளை தொகுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழி .

தங்களுடைய வலைப்பக்கம் மென்மேலும் சிறக்க வேண்டுகிறேன்

அழியாத அன்புடன்
அடலேறு

16 09 2009
kapilashiwaa

உங்களின் முதல் வரவுக்கு மிக்க நன்றி.. உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.
மீண்டும் என் வலைகாண வருவீர்கள் என்ற
நம்பிக்கையுடன்
பிரேமலதா.

18 09 2009
செம்மொழி

அடடா .. நீங்கள் இதைத் தொடர்ந்து படைக்க முழுமையான தகுதியுடைய நபர் தோழி.. தொடர்ந்து பயணியுங்கள்.. புத்தகம் என்றதும் எனக்கு நினைவு வருவது -’alcheimist’- இதைப்படித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.. தொடர்வோம் ..இணையத்தள நண்பர்களாக ..

18 09 2009
kapilashiwaa

நன்றி செம்மொழி..

18 09 2009
jp

All the best.

Don’t under estimate yourself… once again …all the best…. Keep going thair satham…

6 10 2009
குந்தவை

நான் இன்று தான் உங்கள் தளத்திற்க்கு வந்தேன். அருமையான ஆரம்பம். புத்தகத்தின் மீது எனக்கும் தீராத தாகம் உண்டு. வாழ்த்துக்கள் தோழி.

6 10 2009
kapilashiwaa

உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி குந்தவை.
மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

21 10 2009
அடலேறு

பிரேமலதா தங்களின் மின்மடல் முகவரியை இங்கு பகிரவும்

2 11 2009
kapilashiwaa

நன்றி..

29 10 2009
Anbarasu

Everything is correct, but what is meant by சார் (ரகுமான்)…

2 11 2009
kapilashiwaa

நன்றி உங்கள் முதல் வருகைக்கு..
ஒரு அர்த்தமும் இல்லீங்க அன்பரசு. ஒன்னு எல்லா பெயரின் பின் சார் போட்டிருக்கணும், இல்ல இவர் பெயர் பின் போடாம இருந்திருக்கணும். திருத்திக்கொள்கிறேன். நன்றி.
மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

10 11 2009
padmahari

வாழ்த்துக்கள் ப்ரேமலதா! எழுதுவதறக்கான எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு. எழுத எழுத செம்மைப்படும் உங்கள் எழுத்துக்கள். நல்லா கவித எழுதுறீங்க! தொடர்ந்து எழுதுங்க!

உங்களோட பெரிய பலமே நீங்க நெறைய புத்தகம் படிக்கிறீங்க அப்படிங்கிறதுதான். உங்க கவிதைகள எல்லாம் இன்னும் படிக்கல. நேரம் கிடைக்கும்போது படிச்சிட்டு மறுமொழிகிறேன்.

வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம் ப்ரேமலதா!

11 11 2009
கபிலஷிவா

நன்றி பத்மாஹரி. நிச்சயம் சந்திப்போம் உங்களின் மேலான கருத்துக்களை அறிய!

2 07 2010
Sathik

mikavum nandraga ullathu.

6 07 2010
kapilashiwaa

மிகவும் நன்றி..

7 07 2010
kariya

mega nandraga ulathu

9 07 2010
kapilashiwaa

மிக்க நன்றி

9 07 2010
kariya

you need to start …. pls dont stop your dream…

Once again think off…

18 09 2010
கருப்பசாமி

வணக்கம் பிரேமலதா,

என் பெயர் கருப்பசாமி நான் ஒரு முதுநிலை கண்ணிப்பொறி பட்டதாரி என்னுடைய முதற்கண் வாழ்த்துக்கள் ஏனனில் எது மாதிரியான ஒரு வலைப்பூவை தாங்கள் அமைத்து என் போன்ற தமிழனுக்கு பெருமை சேர்த்ததற்கு நன்றி

20 09 2010
kapilashiwaa

மிக்க நன்றி.. உங்கள் முதல் வருகைக்கு..

26 12 2010
ஜெகதீஸ்வரன்

எளிமையான தன்குறிப்பு. நீங்கள் பணி செய்து கொண்டே, வலையுலகில் தொடர்வது என்பது மிகவும் வியப்பளிக்கிறது. உங்களின் நூல் வாசிப்பும், நிறைவான கவிதை புனையும் திறனும் இந்த வலையுலகில் வாசிப்பிற்காக காத்திருக்கும் என்போன்ற பலருக்கும் நல்லதொரு வலைப்பூ.

மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

1 11 2011
செந்தில்குமார்

தொடர்ந்து எழுத முயல்வாய் என் எதிர்ப்பார்க்கிறேன்..
வாழ்த்துக்கள்!

8 01 2012
karthikeyan

மேடம் 4.01 2012 ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் “யார் முதலில்” எனற தலைப்பில் ஒரு கவிதை வெளியாகி இருந்தது.அதை
எழுதியவர் பெயர் எஸ்.பிரேமலதா என்று இருந்தது.

அந்தப் பெயரைப் படித்த பிறகு உங்களின் ஞாபகம்தான் வந்தது.

அது நீங்களாக இருந்தால் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

13 01 2012
kapilashiwaa

இல்லை சார்.. அது நான் இல்லை.

நீண்ட நாள் கழிந்தும் உங்கள் நினைவில்
நிற்க முடிந்தது மகிழ்ச்சியை தருகிறது.

1 06 2012
AKILA (Base ball team)

yethanai per unaku bless solli irukanga.. goodya. itha page padikumpothu doubt, adutha page padichathum confirmpa neethanu.
yanaku mail pannu.. naama parthu pasi yevvalavu naal atchi..

2 06 2012
kapilashiwaa

அகி, ரொம்ப நன்றிப்பா. உங்கிட்ட இனி அடிக்கடி திட்டு வாங்குவேன்னு நினைக்கிறேன்.. இதுதான் ஆரம்பம்.. ரொம்ப எதிர்பார்க்காதப்பா!

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s




Follow

Get every new post delivered to your Inbox.