உன் வரவு.. நல்வரவு!

15 09 2009

மெத்தென்ற பட்டுஇழை முடிகள்..
சின்னப்பிறை நெற்றி.. சிறுவண்டுக் கண்கள்..
பூஞ்சிட்டு மூக்கு.. ரோஜாப்பூ கண்ணங்கள்..
சொப்புவாய் இதழ்கள்.. சிறுசங்கு கழுத்து..
கீரைத்தண்டு கைகள்.. அல்லிப்பூ விரல்கள்..
பிறைநிலா நகங்கள்.. இளந்தாமரை தண்டு உடல்..
இளங்குருத்து கால்கள்.. அந்திப்பூ விரல்கள்..
அவரைப்பூ நகங்கள்.. இலவம்பஞ்சு பாதங்கள்..
இத்தனையும் வைத்து கட்டி
சந்தனமும் பண்ணீரும், இளம்ரோஜா இதழ்களையும்
சேர்தரைத்த குழம்பெடுத்து மேலெங்கும் பூசிவைத்து
செய்தெடுத்த சிற்பமொன்று உயிர்கொண்டு
அன்னைமடி உறங்குதடி..
உறக்கம் கலைந்தாலும் அச்சுகமே பெறவேண்டி
உறங்குவதுபோல் நடிக்குதடி!

உறங்கியது போதும் கண்ணா!
உனக்கான உலகம் படைக்க வருவாய்..
அன்னையின் சிறுவயிற்றில் ஆடியது போதும் கண்ணா..
தந்தையின் தோல்களிலும் தொற்றிக்கொள்ள வருவாய்..
உன் முகம் காணவும் உன் குரல் கேட்கவும்
காத்திருக்கும் எங்களுக்கு தயைக்காட்டி வருவாய்..

ஆலிழைக் கண்ணனாக ஆயிரம் லீலைகள்புரிய
ஆலவட்டம் ஆடிக்கொண்டு அனைவரையும் ஈர்க்க
உன் சின்ன பாதம் கொண்டு இப்புவியையும் அளக்க
உன் அன்னைமேல் கருணை கொண்டு அப்பா நீ வருக!

புத்தம்புது பூஞ்சிறகே வருக..
பூத்துவிரியும் மலர்மொட்டே வருக..
வெட்டியெடுத்த கட்டிப்பொன்னே வருக..
கொட்டிஅளந்த கொற்க்கை முத்தே வருக..
மணி கர்ப்பத்தில் சுமந்த அன்னைமுகம் காண
மன கர்ப்பத்தில் சுமந்த தந்தைமுகம் காண
கண்ணே நீ வருக! கண்மணியே நீ வருக!


செயல்கள்

தகவல்

6 பதில்கள்

16 09 2009
சுவாசிகா

அருமையான ஆழமான கவிதை..

//உறங்கியது போதும் கண்ணா!// பத்தியை மிகவும் ரசித்தேன்..

நீங்கள் தமிழ் பத்திரிகைகளுக்கு உங்களுது கவிதைகளை அனுப்பலாமே..

அன்புடன்
சுவாசிகா
http://swachika.wordpress.com

17 09 2009
kapilashiwaa

இதுவரை இப்படி யோசித்ததில்லை சுவாசிகா. உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி..

16 09 2009
semmozhi

நல்ல பதிப்பு .. தொடர்க..

என்னுடைய புதிய பதிப்பிற்கு வருகை தருக..வந்து கருத்துக்களை விட்டுச் செல்க

17 09 2009
kapilashiwaa

உங்கள் முதல் வருகைக்கு நன்றி செம்மொழி..

17 09 2009
jp

I thought u are a good friend for me, apart from that you are great No words to say….

The poet of yours gone till the (karuvarai…) like that your name in this field should reach all over the world. All the best…

unn nalla ennagaluku enn valzthukal….

17 09 2009
kapilashiwaa

ரொம்ப சந்தோசம் ஜே.பி உன் வேலைக்கு நடுவிலும் இதை படிச்சதுக்கு, உடனே இப்படி ஒரு வாழ்த்து அனுப்பினதுக்கு..

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s




Follow

Get every new post delivered to your Inbox.