காதல் பயணங்களில்..

19 10 2009

1. அன்புக்காதல் – இதுவும் காதல்!
கல்லில் வடிக்காத சிற்பக்காதல்
காகிதத்தில் வரையாத சித்திரக்காதல்
கல்கி எழுதாத சரித்திரக்காதல்
காவியங்கள் பாடாத உண்மைக்காதல்

அடிமுடி தெரியாத அழகியக்காதல்
ஹார்மோன்கள் வேலையற்ற அற்புதக்காதல்
பொறாமை இல்லாத புனிதக்காதல்
ஆண்பெண் தெரிவில்லாத அமுதக்காதல்.

“உனக்கும் பிடிக்குமே! கேட்போமா?
நம்மை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி!”

என்று சகதோழனையும் துணைக்கு
அழைக்கும் தூய்மையானக் காதல்!
பிரிவே இல்லாத பிரியமான காதல்!
என் வாழ்வில் இதுபோல் இல்லையென
மறுக்க இயலாத காதல்!

-அதுதான்
நம் சிறுவயதுக் காதல்!
நம் ஆசிரியை(யர்) மேல் நாம் கொண்ட
ஒருவித அன்புக்காதல்!
பெற்றோர்களே பெருமையுடன் பேசிச்சிரிக்கும்
பேரின்பக்காதல்!

இத்தனை
சொல்லும்போதும் ஒரு உறுத்தல்..
இந்த அழகான உணர்வை காதல் என்ற
வார்த்தைக்கொண்டா நிரப்ப வேண்டும்?

சரி, போகட்டும் வார்த்தை எதுவாக
இருந்தால் என்ன..!! நம் உள்ளம்
கொள்ளும் உணர்வுதானே முக்கியம்.
நம் தாய்(தந்தை)யிடம் நாம் கொண்ட
உணர்வுக்கு எள்ளளவும் வேறுபட்டதில்லையே..
இது..!

2. கவர்ச்சிக்காதல் – இதுவா காதல்?

சிக்கலில் சிக்க வைத்து சிரிக்கும் காதல்
சிந்தையையும் சேர்த்து சிதைக்கும் காதல்
கானல் நீரில் கால் நனைக்கும் காதல்
கடவுள் வந்தாலும் கண் மறைக்கும் காதல்

ஹார்மோன்களின் அடியாளாகும் காதல்
அரலிப்பூவிலும் தேன்தேடும் காதல்
விளையாட்டுபோல் இருக்கும் விபரீதக்கதல்
ஆசைமட்டுமே கொண்டிருக்கும் அலட்சியக்காதல்

நான் உன்ன விருப்பறேன். நீயும் என்னை
விருப்பித்தான் ஆகனும்”

என்ற கட்டாயத்தை உருவாக்கும் காதல்!
இது மட்டுமே வாழ்க்கை எனக்
கனவுப்பாடம் நடந்தும் காதல்!

- அதுதான்
நம் பதின்ம வயதுக்காதல்!
நம் சக எதிர்பாலினத்தினர் மீது நாம் கொள்ளூம்
ஒருவிதக் கவர்ச்சிக்காதல்.
பெற்றோர்களின் பெருமையை அழிக்கத்துடிக்கும்
சிற்றின்பக்காதல்!

அதனால்
இதை காதல் என்று எப்படிச் சொல்வது?
பதின்ம வயதின் ஈர்ப்பு!
காதல் செய்ய தெரிந்த அளவு காதல்
என்றால் எதுவென்று தெரியாத வயது!

அடிமனதில் ஆர்வங்கள் இருந்தபோதும்
ரகசியமாக ரசித்து, ரகசியமாக சிரித்து
ரகசியமாகவே அதை ஒதுக்கி வைத்து
சிக்கல் இல்லாமல் சிறைமீண்டவர்கள்
பலர் இருப்பினும் மீளத்தெரியாமல்
சிக்கித் தவிப்பவர்களும் சிலர் உண்டு.

கட்டுப்பாடு இல்லாமல் கட்டவிழ்ந்து
ஓடும் கன்றுகுட்டியைப் போல் எதுவும்
புரியாமலே பரபரக்கும் நம்வயது..

ஆபத்தான வாய்ப்பு கிடைத்தாலும் அதுஎன்ன?
என்று பார்த்துவிட துடிதுடிக்கும் நம்மனது..

பரபரக்கும் வயதையும், துடிதுடிக்கும் மனதையும்
கட்டிப்போட கையிறு எதுவும் தேவையில்லை.
கண்காணிப்பு மட்டுமே போதும்..
பெரும்படைகள் எதுவும் தேவையில்லை
நம்பெற்றோர்களே போதும்..

நம்மீது நம்வயது செய்யும் வன்முறைதான்
இந்த காதல்..!
அது தவிர வேரொன்றும் இல்லை
இது..!

-தொடரும்..


செயல்கள்

தகவல்

15 பதில்கள்

21 10 2009
சுவாசிகா

//அதனால்
இதை காதல் என்று எப்படிச் சொல்வது?
பதின்ம வயதின் ஈர்ப்பு!
காதல் செய்ய தெரிந்த அளவு காதல்
என்றால் எதுவென்று தெரியாத வயது!//

உண்மைதான்.. ஆனால் அந்த வயதில் இந்த உண்மை தெரிவதுமில்லை..தெரிந்தாலும் ஏற்று கொள்ளும் மனநிலையும் இல்லை..
இதற்க்கு ஒரு முடிவும் விடிவும் இல்லை…

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me >> என் புது வலை வீடு :)

24 10 2009
ungal vasagan

ungal parvail neengal sonna kadhal nijamanathuthan. athai nanum unarkiran naan mattumalla ellorume unarvaarkal. kadhalai patri solla neengal kaiyaanda varthaigal rompa sariyaga ullathu . ungal varthaigal kadhalai kadhalaga mattum pakka thonukirathu. innum ethir parkirran …

2 11 2009
kapilashiwaa

நன்றி!
\\ungal varthaigal kadhalai kadhalaga mattum pakka thonukirathu\\

அதுதான் என் எண்ணமும்..

\\innum ethir parkirran \\
விரைவில்..

26 10 2009
K.SIVA(Fr)

Kaathail Enpthu Kadavulaip Poola, Kaanpavai Miiddik Kaanum Poothum, Vaalkkajil Arththam Putiiyaanirkum Poothum, Theedum Manithar Kidaikkaa Veelaiyum, Miithamaaji Putiyaa Atppa Aasaikal, Ivaipool Eththanai Ennang Koondidil, Mannil Aaasai Poonil Aasai, Ippadip Paarkkin Etthanai Etthanai, Ivatrai Vidavum Miilaa Aaasaikal, Koolvoor Manathy Mudiyaa Kaathal, Ivarkalaik Kuuri Niidiya Urakkamillaa, Matanam Varaikkum Urangkaak Kaathala(r)tenpéén. “” URANGKAA KAATHALR “” K.SIVA(Fr)

2 11 2009
kapilashiwaa

கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படிச்சேன். உண்மைய சொல்லனும்னா கொஞசம் புரியத்தான் இல்லை. இருந்தாலும் நன்றி. உங்கள் எண்ணங்களை பதித்ததற்க்கு..

28 10 2009
rajaraman

neengal sonna irandavathu kavithai than unmai athuthan niyathium kuuda

5 11 2009
kapilashiwaa

ஆமாம் ராஜாராம்.. தவிர்க்க வேண்டிய நியதியும் கூட. உங்கள் முதல் வருகைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.

30 10 2009
Kariya

Nice… analysis of Kadal…

2 11 2009
kapilashiwaa

நன்றி!

10 11 2009
padmahari

கலக்கிட்டீங்க கபிலஷிவா! வாழ்த்துக்கள்.

//ஹார்மோன்கள் வேலையற்ற அற்புதக்காதல்//

நான் இத எதிர்பார்க்கல. மேற்கோள் காட்டி மறுமொழியனும்னா என் மறுமொழியே ஒரு பதிவாயிடும். அதனால வித்தியாசமா இருக்கிற ஒரு வரி மட்டும்.

நல்லா எழுதுறீங்க. உங்கள் ஆக்கங்கள் தொடர என் வாழ்த்துக்கள்! நன்றி.

11 11 2009
கபிலஷிவா

உங்க வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி பத்மாஹரி. ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோசம். நீங்க சொல்ல நினைச்ச எல்லா மறுமொழிகளையும் சொன்னா நான் இன்னும் சந்தோசப்படுவேன். அது இன்னொரு பதிவானாலுமே..

13 11 2009
அடலேறு

இத்தனை காதலா :-)

இதெல்லாம் அனுபவிக்காம கல்லூரிய முடிச்சுட்டயே அடலேறு :-(

இத்தனை காதலுக்கும் கவிதை எழுதினால் அது போய்டே இருக்குமே

13 11 2009
kapilashiwaa

பள்ளி காதல் வரைக்கும்தான் எழுதி இருக்கேன் அடலேறு. இன்னும் கல்லூரி காதலை ஆரம்பிக்க முடியல. என் பையனுக்கு பரிட்சை, நான் படிக்க வேண்டியதாப் போச்சி :-) அடுத்த பதிவு அதுதான்..

கவலைய விடுங்க அடலேறு, கால்லூரி முடிச்சா என்ன, மனசு இருந்தா மார்க்க பந்து..

13 11 2009
அடலேறு

இதுல தொடரும் இருக்கறத இப்ப தான் பாத்த கபிலசிவா. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

13 11 2009
kapilashiwaa

விரைவில் பதிய முயர்ச்சிக்கிறேன் அடலேறு.. நன்றி! இத பதிவிடும்போது கொஞ்சம் யோசனையாத்தான் இருந்தது. உங்களுடைய காத்திருப்பு இப்பதிவு அவ்வளவு மோசமில்லை என்ற தைரியம் கொடுக்குது. ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தா சொல்ல தயக்கம் வேண்டாம் அடலேறு.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s




Follow

Get every new post delivered to your Inbox.