என் குடும்பம்

என் கணவர் இரா.செந்தில்குமார். சேலம் மாவட்டத்தில்  பிறந்து ஈரோடில் படித்து இப்பொழுது சென்னையில் மின்சார மேற்பார்வையாளராக பணிபுரிகின்றார்.கபடி விளையாட்டில் ஆர்வம் அதிகம்.சில முதல் பரிசுகளும் உண்டு. இசையில் அதிரவைக்கும் பாடல்கள்,குத்துப்பாடல்கள் இவற்றிற்குதான் முதலிடம்.செய்திதாள்களை பக்கம் பக்கமாக படித்தாலும் ஏனோ புத்தகங்களை தொடக்கூட மாட்டார்.பார்ப்பதற்கு அமைதியானவர், பழகுவதற்கு இனிமையானவர், நண்பர்களுக்கோ படுகிண்டலான பேர்வழி.

என் மகன்  எஸ்.கபிலசிவா. 4 – ஆம் வகுப்பு (2012)  படிக்கின்றான். இயற்கையான குழந்தைதனம், குரும்புதனம் அத்தனையும் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பள்ளி கிரேடில் A+ க்கு குறையாதவன். ஒரே பாடத்தில் ஒருமுறை 100 மதிப்பெண்களும் இன்னொரு முறை பாதிக்கும் கீழேயும் எடுத்து என்னை கதிகலங்க வைப்பான். வீட்டிற்கு வந்தால் படிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டிருப்பவன் போல்தான் நடந்துக்கொள்வான்.கடும் முயற்ச்சி எடுத்தே  வீட்டுப்பாடம் செய்ய வைக்கின்றேன்.

வடிவேலு காமெடிகளை மனப்பாடம்செய்வான். கார்ட்டூன்களையும் ஜெட்எக்ஸ்களையும் கரைத்து குடிப்பான்.  கணினியில் கார் ரேஸ் விளையாடும்போது வாய் இருந்தால் கீபோர்ட் அழுதேவிடும், அப்படி ஒரு வேகம் இருக்கும் அவன் விரல்களில். சொந்தங்களை  கூட  ஸார்ட்  நேம்  வைத்துதான் கூப்பிடுவான். எங்குதான் இதை எல்லாம் கற்றுக்கொள்கிறானோ?ஒன்றும்புரியவில்லை போங்கள்..

எங்கள் வாழ்க்கையின் எதிர்கால நம்பிக்கை எங்கள் மகன்தான். அதற்கேற்ப அவன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் எங்களுக்கு உண்டு. விருப்பமானது என்று எதை தேர்ந்தெடுக்கவும் அவனுக்கு  உரிமை உண்டு, அதே சமயம் அதில் இறுதிவரை போராடி வெற்றி பெறும்  கடமையும் உண்டு என்பதை உணர்ந்தாலே போதும்.. நாங்கள் விரும்பும் நிலையை அடைந்து விடுவான்..

எதிர்காலம் அவனுக்காக எதை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என்று தெரியவில்லை.ஆயினும் நிகழ்காலத்தில் அவனை  வழிநடத்தும்           பொறுப்பை   எங்களிடம்தான்  விட்டுச் சென்றிருக்கிறது.  அதை நாளுக்கு நாள் சரியான முறையில் செய்து கொண்டிருந்தாலே  போதும்.மற்றதை கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் தான்  வாழ்க்கை  ஓடிக்கொண்டிருக்கிறது.

3 responses

7 06 2012
AKILA (Base ball team)

Hai Prema, neethana ithu.. yethasaya intha blog vanthen, padikumpoth therijathu.. ada namma prems! sollave illa, ippadi onu seiyarenu..school padikupothe yethavathu kavithai ezuthite irupa.. niceya.. yen 2 years break.. correcta continue panupa.. nalla seiva nee..!

7 06 2012
kapilashiwaa

அகி, எதிர்பார்க்கலப்பா உன்ன, இந்த பக்கத்த நேத்துதான் போட்டேன்.
முதல்ல நீதான்.. மெயில் போட்டிருக்கேன். நன்றி!

13 06 2012
R. Senthil Kumar

இதுக்கு 2.5 வருசம் ஆச்சா? சரி.. இப்பவாவது போட்டியே..
அது என்ன? அவனுக்கு மட்டும் 2 பத்தி.. நான் ஒத்துக்க மாட்டேன்..

பின்னூட்டமொன்றை இடுக